திருப்பூர்

முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள்  கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

31st Jul 2019 08:25 AM

ADVERTISEMENT

திருப்பூர் மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் பிரதமரின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார். 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
முப்படைப் பிரிவுகளில் அலுவலர் அந்தஸ்துக்கும் குறைவாகப் பணியாற்றிய முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் 2019-20ஆம் கல்வி ஆண்டில் கல்லூரி முதலாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மைய முப்படை வீரர் வாரியத்தின் மூலம் பிரதமரின் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்களை  இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அனைத்து அசல் ஆவணங்களுடன் திருப்பூர் முன்னாள் படை வீரர் நல அலுவலகத்துக்கு நேரில் வரவேண்டும். 
பிளஸ் 2 வகுப்பில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்று தொழில் படிப்பு படிக்கும் முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியும்.
இதில் மாணவர்களுக்கு ரூ.2,500, பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படுகிறது. இணையதளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய கடைசி தேதி நவம்பர் 15 ஆம் தேதி ஆகும்.
எனவே, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் குறித்த காலத்துக்குள் விண்ணப்பித்து பயனடையலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421-2971127 எண்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT