திருப்பூர்

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாமில் 259 மனுக்கள் பெறப்பட்டன

31st Jul 2019 08:16 AM

ADVERTISEMENT

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாமில் 259 மனுக்கள் பெறப்பட்டன. 
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். இதில், மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து மாதாந்திர உதவித்தொகை, உதவி உபகரணங்கள், வீட்டுமனைப் பட்டா மற்றும் வேலைவாய்ப்பு  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 259 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட அலுவலர்களை ஆட்சியர் அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து, 3 பயனாளிகளுக்கு தலா ரூ.7 ஆயிரம் மதிப்பில் சக்கர நாற்காலி, 6 பயனாளிகளுக்கு தலா ரூ.500 மதிப்பில் ஊன்று கோல் என 9 பயனாளிகளுக்கு ரூ.24 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் விமல்ராஜ், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT