திருப்பூர்

மகாத்மா காந்தி, திருப்பூர் குமரன் தபால் உறை வெளியீடு

31st Jul 2019 08:18 AM

ADVERTISEMENT

அஞ்சல் துறை சார்பில் மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினத்தை ஒட்டி மகாத்மா காந்தி, சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரன் ஆகியோரது உருவம் பொறித்த தபால் உறை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. 
மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரன் ஆகியோரின் நினைவாக அஞ்சல் துறை சார்பில் தபால்  உறை வெளியீட்டு விழா திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு தலைமை வகித்த மேற்கு மண்டல அஞ்சல் துறை இயக்குநர் வி.ராமசாமி தபால் உறையை வெளியிட திருப்பூர், கே.எம்.நிட்வேர் நிர்வாக இயக்குநர் கே.எம்.சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். 
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற புதுதில்லியில் உள்ள தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குநர் ஏ.அண்ணாமலை பங்கேற்றார்.
இந்த விழாவில், மகாத்மா காந்தியில் வாழ்க்கையில் நடந்த ஒரு சில நிகழ்வுகள் அடங்கிய விடியோ, உரையாடல்கள், அரிய புகைப்படங்கள் அடங்கிய பென்டிரைவ் ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், பல அரிய தபால் தலைகளை கேசவமூர்த்தி காட்சிப்படுத்தியிருந்தார். 
விழாவில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம், திருப்பூர் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் எஸ்.கோபிநாதன், திருப்பூர் காந்தி நகரில் உள்ள சர்வோதய சங்கத்தின் செயலாளர் ஏ.செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT