திருப்பூர்

பள்ளியில் தூய்மை இந்தியா திட்ட முகாம்

31st Jul 2019 08:17 AM

ADVERTISEMENT

உடுமலையை அடுத்துள்ள பாலப்பம்பட்டி ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ்.எஸ்., செஞ்சிலுவை சங்கம் ஆகியவை சார்பில் தூய்மை இந்தியா திட்ட முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது .
  முகாமை கல்லூரி ஆலோசகர் ஜெ.மஞ்சுளா துவக்கிவைத்தார். இதில்,  பாலப்பம்பட்டி அரசு துவக்கப் பள்ளியில் சுற்றுச்சுவர்களுக்கு வர்ணம் பூசப்பட்டது. அருகில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையும் மாணவர்கள் சுத்தம் செய்து வர்ணம் பூசினர். கல்லூரி இயக்குநர் சுமதி கிருஷ்ணபிரசாத் இப்பணிகளில் ஈடுபட்ட மாணவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் டி.ரகுபதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT