திருப்பூர்

சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

31st Jul 2019 08:29 AM

ADVERTISEMENT

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் பணியாற்ற தன்னார்வ தொண்டர்கள் ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
இதுதொடர்பாக திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான எஸ்.அல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூர் மாவட்டத்தில் இயங்கும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் பணியாற்ற தன்னார்வ தொண்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
எனவே, சமூகப் பணி மற்றும் சட்டம் சார்ந்த பணியில் ஈடுபட ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் (‌h‌t‌t‌p://‌d‌i‌s‌t‌r‌i​c‌t‌s.‌e​c‌o‌u‌r‌t‌s.‌g‌o‌v.‌i‌n/‌t‌i‌r‌u‌p‌p‌u‌r) என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதில், மருத்துவர்கள், ஆசிரியர்கள் (பணி நிறைவு செய்தவர்கள் உள்பட), சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், சட்டம் பயின்ற மாணவர்கள்(வழக்குரைஞராகப் பதிவு செய்யும் வரை), கல்வியறிவு மற்றும் நல்லொழுக்கத்துடன் கூடிய நீண்டகால தண்டனை பெற்ற சிறைவாசிகள், அரசியல் கட்சியைச் சாராதவர்கள், சமூகப் பணியில் ஈடுபடும் அரசு சாரா அமைப்பினர், சுய உதவிக் குழுக்கள் மற்றும் பெண்கள் அமைப்புகளில் பங்கு பெறும் பெண்கள் மற்றும் பாதிப்படைந்த பெண்களின் பிரதிநிதிகள், அங்கன்வாடி பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி செய்யும் நாளில் ரூ.500 மதிப்பு ஊதியம் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தலைவர் மற்றும முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம், திருப்பூர் அல்லது தலைவர் மற்றும் சார்பு நீதிபதி, வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலைபேட்டை ஆகிய வட்டங்களில் ஏதேனும் ஒரு முகவரிக்கு அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT