திருப்பூர்

அவிநாசியில்  அரசுப் பேருந்து மோதி இளைஞர் சாவு

31st Jul 2019 08:18 AM

ADVERTISEMENT

அவிநாசியில் இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
அவிநாசி முத்துசெட்டிபாளையத்தைச் சேர்ந்த சங்கர் மகன் அருண்குமார் (21).  இவர் அவிநாசி- திருப்பூர் சாலையில் உள்ள தனியார் பைப் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், இவர் அவிநாசி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் சாலையோர நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இது குறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT