திருப்பூர்

குன்னத்தூரில் அடிப்படை வசதி கோரி காத்திருப்புப் போராட்டம்

30th Jul 2019 08:37 AM

ADVERTISEMENT

குன்னத்தூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பொன்காளியம்மன் நகரில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  ஊத்துக்குளி வட்டம், குன்னத்தூர் பேரூராட்சிக்கு உள்பட்ட 15ஆவது வார்டு பொன்காளியம்மன் நகரில் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இலவச வீட்டுமனைப் பிரிவில் வசிக்கும் மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
    இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேரூராட்சி செயல் அலுவலர், வருவாய்த் துறையினர், போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 
  பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதி  அளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள்  கலைந்துசென்றனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT