திருப்பூர்

மூலனூரில் ரூ.1.52 கோடிக்கு பருத்தி விற்பனை

27th Jul 2019 07:09 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.52 கோடிக்கு பருத்தி விற்பனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இந்த வார ஏலத்தில் திருச்சி, மணப்பாறை, கரூர், திண்டுக்கல், அறவக்குறிச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 536 விவசாயிகள் தங்களுடைய பருத்திகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனர்.
திருப்பூர், உடுமலைப்பேட்டை, தாராபுரம், அவிநாசி, பொள்ளாச்சி, காரமடை, அன்னூர், சேவூர், கரூர், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 15 வணிகர்கள் பருத்தி வாங்குவதற்காக வந்திருந்தனர்.விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் தர்மராஜ் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. மொத்தம் 6,930 மூட்டைகள் வரத்து இருந்தன. குவின்டால் ரூ.5,500 முதல் ரூ.6,930 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.6,400 ஆகும். இவற்றின் விற்பனைத் தொகை ரூ.ஒரு கோடியே 52 லட்சம் ஆகும். இந்த வாரம் குவின்டாலுக்கு ரூ.100 குறைந்ததாக திருப்பூர் விற்பனைக் குழு முதன்மைச் செயலாளர் பாலசந்திரன் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT