திருப்பூர்

பரம்பிக்குளம் - ஆழியாறு  வாய்க்காலில் குடிமராமத்துப் பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

27th Jul 2019 07:05 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவிலில் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்காலில் குடிமராமத்துப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளர் அசோக்பாபு தலைமை வகித்தார். உதவிப் பொறியாளர் வடிவேல், வட்டார வேளாண்மை அலுவலர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
வெள்ளக்கோவில் பகுதி பரம்பிக்குளம் -ஆழியாறு பாசன வாய்க்கால்களை சுத்தம் செய்ய தமிழக அரசு ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. எந்தெந்த வாய்க்கால், கிளை வாய்க்கால்களில் பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. 
தண்ணீர் திறந்து விடப்படும்போது கிளை வாய்க்கால்களின் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் வருவதில்லை. எனவே, பிரதான வாய்க்காலுடன், கிளை வாய்க்கால்களையும் சுத்தம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கூறினர். 
இது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் வேளாண்மைத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள், வாய்க்கால் பாசன நீரினைப் பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள் கண்ணுசாமி, கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT