திருப்பூர்

வெள்ளக்கோவிலில் 9 டன் முருங்கைக்காய் வரத்து

22nd Jul 2019 10:20 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை 9 டன் முருங்கைக்காய் வரத்துக் காணப்பட்டது.
இங்கு முத்தூர் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் கொள்முதல் மையத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் முருங்கைக்காய்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர்.  இந்த வாரம் 65 விவசாயிகள் மொத்தம் 9 டன் முருங்கைக்காய்களைக் கொண்டுவந்தனர். மர முருங்கைக்காய் கிலோ ரூ. 15, செடி முருங்கைக்காய் ரூ. 20, கரும்பு முருங்கைக்காய் கிலோ ரூ. 25 என வியாபாரிகள் வாங்கினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT