திருப்பூர்

காங்கயம் அருகே சிதிலமடைந்து காணப்படும் சமுதாய நலக்கூடம்

22nd Jul 2019 10:17 AM

ADVERTISEMENT

காங்கயம் அருகே மறவபாளையத்தில் சிதிலமடைந்த நிலையில் காணப்படும் சமுதாய நலக்கூடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மறவபாளையத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. பொதுமக்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை இங்கு நடத்தி வந்தனர். 
இந்த சமுதாய நலக்கூடம் ஆங்காங்கே சிதிலமடைந்து காணப்பட்டதால் 2013-14ஆம் நிதியாண்டில் ரூ. 89 ஆயிரம் செலவில் பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டன. 
இந்நிலையில், தற்போது சமுதாய நலக்கூடத்தின் மேற்கூரையில் சன்ஷேடு உடைந்து தொங்கிக்கொண்டுள்ளது. மழைக் காலங்களில் தண்ணீர் கட்டடத்துக்குள் கசிந்து வருகிறது. இந்தக் கட்டடத்தின் எதிரே பால் கொள்முதல் நிலையமும், மாகாளியம்மன் கோயிலும் உள்ளன. இங்கு வரும் பொதுமக்கள் சமுதாய நலக்கூடம் அருகில் சென்று அமர்வது வழக்கம்.  
இக்கட்டடத்தின் காரை பெயர்ந்து,  உடைந்து விழுவதற்கு முன்பாக அதை சரி செய்ய மறவபாளையம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT