அவிநாசி பேரூராட்சியில் சீர்மிகு நகரம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பேரூராட்சி அலுவலர் டி.ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி முன்னிலை வகித்தார். பயிற்றுநர் கென்னடி இது தொடர்பான பயிற்சி அளித்தார். பரப்புரையாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மின் பணியாளர்கள், சுய உதவிக் குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், திடக்கழிவுக் மேலாண்மை, குடிநீர், தெருவிளக்குப் பாரமரிப்பு, தனிநபர் கழிப்பிடம், சமுதாயக் கழிப்பிடப் பராமரிப்பு, டெங்கு கொசு ஒழிப்பு உள்ளிட்ட பணிகளை விரைவுபடுத்துவது, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.