திருப்பூர்

குடும்ப அட்டையில் ஆதார் எண்ணை பதிவு செய்ய 20 இல் சிறப்பு முகாம்

18th Jul 2019 09:50 AM

ADVERTISEMENT

திருப்பூர் மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டையில் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய சனிக்கிழமை (ஜூலை 20) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
 இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மின்னணு குடும்ப அட்டையில் ஆதார் எண்ணைப் பதிவு செய்வது தொடர்பாக சனிக்கிழமை காலை 10 முதல் மாலை 6 மணி வரையில் சிறப்பு முகாம்கள்
 நடைபெற உள்ளது. இதுவரை மின்னணு குடும்ப அட்டையில் ஆதார் எண் பதிவு செய்யாத 5 வயதுக்கு உள்பட்ட மற்றும் 5 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் தங்களது குடும்பத்தில் இருப்பின் அசல் ஆதார் அட்டை, அசல் மின்னணு குடும்ப அட்டையை கொண்டுச் சென்று ஆதார் எண்ணைப் பதிவு செய்து கொள்ளலாம்.
 இதுவரை ஆதார் எடுக்காத 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இருப்பின் குழந்தைகளின் அசல் பிறப்புச் சான்று, பெற்றோரின் ஆதார் அட்டையுடனும், 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, பள்ளி மற்றும் கல்லூரிகளில் வழங்கப்பட்ட கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று புதிய ஆதார் அட்டை எடுத்துப் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT