அந்தியூரை அடுத்த புதுப்பாளையத்தில் உள்ள குருநாத சுவாமி கோயில் ஆடித் தேர்த் திருவிழா பூச்சாட்டுதலுடன் புதன்கிழமை தொடங்கியது.
பிரசித்தி பெற்ற இக்கோயில் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். விழாவை முன்னிட்டு வனக் கோயிலில் உள்ள குருநாத சுவாமி, பெருமாள் மற்றும் காமாட்சியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூச்சாட்டுதல் நடைபெற்றது. இதில், அந்தியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஆடித் தேரோட்டம் நடைபெறுகிறது. இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு நான்கு நாள்கள் கால்நடைச் சந்தை நடைபெறும்.