திருப்பூர்

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு

16th Jul 2019 07:23 AM

ADVERTISEMENT

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 
 தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் நிலத்தடி நீரை சேகரிக்கவும், குளம் குட்டைகளை தூர்வாரவும் அரசு, தனியார் அமைப்புகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
 மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து துறை சார்ந்த கூட்டங்களை நடத்தி, மழைநீர் சேமிப்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மழை நீர் சேகரிப்புக்கான கட்டமைப்பை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த திட்டமானது அனைத்து அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி, மாநகருக்கு உள்பட்ட வீடுகளுக்கும் செயல்படுத்தப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT