திருப்பூர்

சேவூரில் நிலக்கடலை ஏலம்

16th Jul 2019 07:24 AM

ADVERTISEMENT

சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.3 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.
சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 115 மூட்டைகள் வந்திருந்தன. குவின்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.6,600 முதல் ரூ. 6,880 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ. 5,850 முதல் ரூ. 6,100 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ. 5,000 முதல் ரூ.5,130 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.3 லட்சத்துக்கு ஏலம் 
நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT