திருப்பூர்

பழையகோட்டை மாட்டுச் சந்தை: ரூ. 30 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை

15th Jul 2019 10:04 AM

ADVERTISEMENT

நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மொத்தம்  ரூ. 30 லட்சத்துக்கு விற்கப்பட்டன.
பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 133 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன. இதில் 62 மாடுகள் மொத்தம் ரூ. 30 லட்சத்துக்கு விற்கப்பட்டன. அதிகபட்சமாக ரூ. 88 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலைப் பசு விற்பனையானது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT