வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சிவன் கோயில்களிலுள்ள நந்தியம்பெருமானுக்கு பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மூலவருக்கு பூஜை செய்து பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. வெள்ளக்கோவில், மயில்ரங்கம், லக்கமநாயக்கன்பட்டி, உத்தமபாளையம், கண்ணபுரம் ஈஸ்வரன் கோயில்களிலும் பிரதோஷ பூஜைகள் விமரிசையாக நடைபெற்றன. இதில், திரளான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்தப் பகுதி பிரதோஷ வழிபாட்டுக் குழுவினர் செய்திருந்தனர்.