திருப்பூர்

மாநகராட்சிப் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம்  மதிப்பிலான சீர்வரிசை

12th Jul 2019 08:58 AM

ADVERTISEMENT

திருப்பூரில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கல்வி உபகரணங்களை சீர்வரிசையாக மாணவர்களின் பெற்றோர் வியாழக்கிழமை வழங்கினர்.
திருப்பூர், அ.செட்டிபாளையத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களின் பெற்றோர், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருள்களை எடுத்துக் கொண்டு மேளதாளத்துடன் ஊர்வலமாக வியாழக்கிழமை பள்ளிக்கு வந்தனர்.
அவர்களை தலைமை ஆசிரியை தரணி வரவேற்று, கல்வி உபகரணப் பொருள்களை பெற்றுக் கொண்டார். பின்னர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் கவுன்சிலர் மாரப்பன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை தரணி வரவேற்றார். காந்திநகர் ரோட்டரி சங்கத் தலைவர் அப்துல் காதர், பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் சிவசுப்பிரமணியம், ராமசாமி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் உமாவதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில் பெற்றோர், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT