திருப்பூர்

போலி வழக்குரைஞர் கைது

12th Jul 2019 09:00 AM

ADVERTISEMENT

திருப்பூரில் போலி வழக்குரைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். 
திருப்பூர் நீதிமன்ற வளாகத்தில் போலி வழக்குரைஞர் நடமாடிக் கொண்டிருப்பதாக திருப்பூர் வடக்கு காவல் துறையினருக்குத்  தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் அங்கு சென்று சந்தேகத்துக்கிடமாக நடமாடிக் கொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
 இதில், அவர் சென்னை, தண்டையார்பேட்டை, ரங்கன் வீதியைச் சேர்ந்த ஆர்.செல்வராஜ் (49) என்பதும், அவர் போலி வழக்குரைஞர் என்பதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து செல்வராஜை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து போலி அடையாள அட்டையை பறிமுதல் செய்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT