திருப்பூர்

காவலர் விடுதியில் திருட முயன்ற 4 பெண்கள் கைது

12th Jul 2019 08:59 AM

ADVERTISEMENT

திருப்பூரில் காவலர் விடுதியில் திருட முயன்ற 4 பெண்களை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். 
திருப்பூர் வடக்கு காவல் நிலையம் அருகே காவலர் விடுதி உள்ளது. இந்தக் காவலர் விடுதியில் திருப்பூர் மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் சேதுபதி என்பவர் மனைவியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சேதுபதியின் மனைவி கனகா வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள் 4 பெண்கள் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனர். பீரோவில் இருந்த நகைகளை அவர்கள் திருட முயன்றபோது அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 4 பெண்களையும் கனகா மடக்கிப் பிடித்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணையில் பிடிபட்டவர்கள், திருப்பூர், பழவஞ்சிபாளையத்தைச் சேர்ந்த பவானி (23), ராணி (22), சந்தியா (21), செல்வி (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT