திருப்பூர்

வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

6th Jul 2019 09:06 AM

ADVERTISEMENT

பல்லடம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.  
பல்லடம் பகுதியில் காரில் வந்து சாலையில் செல்வோரிடம் வழிப்பறி செய்த சம்பவம் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி பல்லடம் போலீஸாருக்கு உத்தரவிட்டார். அத்துடன் பல்லடம் துணை கண்காணிப்பாளர் முத்துசாமி மேற்பார்வையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு வழிப்பறியில் ஈடுபட்டோரை போலீஸார் தேடி வந்தனர்.  இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி பல்லடத்தில் கார்த்திக் என்பவரிடம் ரூ. 1000 வழிப்பறி செய்து தப்பிச் சென்றபோது சிவகங்கையைச் சேர்ந்த பாலமுருகன் (28), ரஞ்சித்குமார் (23) ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்து கார் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.  கைது செய்யப்பட்ட இருவரின் மீதும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT