உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலை விழிப்புணர்வு நாடகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் என்.சந்திரன் தலைமை வகித்தார். செஞ்சுலுவை சங்கப் பொறுப்பாளர் பி.அனிதா கிருஷ்ணவேணி வரவேற்றார். உடுமலை காவல் நிலைய முதல் நிலை காவலர் எஸ்.லட்சுமணன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வின் அவசியம் என்ற தலைப்பில் பேசினார்.
அப்போது தலைக் கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து அவரவர் பெற்றோர்களுக்கு வலியுறுத்த வேண்டும் என மாணவ, மாணவிகளிடம் எடுத்துக் கூறினார்.
இதையொட்டி சாலை விதிகளை மதிப்போம் எனும் தலைப்பில் குறுநாடகம் நடைபெற்றது. என்எஸ்எஸ் திட்ட அலுவலர் செ.சரவணன் நன்றி கூறினார்.