திருப்பூர்

வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குநர்கள் 4 பேர் ராஜிநாமா

2nd Jul 2019 08:16 AM

ADVERTISEMENT

திருப்பூர் அருகே முதலிபாளையம் ஊராட்சியில் உள்ள மாணிக்காபுரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க இயக்குநர்கள் 4 பேர் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.
மாணிக்காபுரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர்களான எம்.காந்திமதி (சிபிஎம்), பி.ஈஸ்வரி (திமுக), பி.நாச்சிமுத்து (திமுக), ஜி.சரவணமுத்து (தமாகா) ஆகிய 4 பேரும் தனித்தனியாக ராஜிநாமா கடிதத்தை மாணிக்காபுரம் கூட்டுறவு சங்கத் தலைவருக்கு திங்கள்கிழமை அனுப்பி வைத்துள்ளனர். 
இதில், மாணிக்காபுரம் கூட்டுறவு வங்கியில் தாங்கள் முறையாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதற்குக் காரணம் தேர்தல் முறையாக நடைபெறவில்லை. எனவே, இயக்குநர் பொறுப்பில் இருந்து ராஜிநாமா செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT