திருப்பூர்

மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இன்று உள்ளாட்சித் தோ்தல்

29th Dec 2019 11:08 PM

ADVERTISEMENT

திருப்பூரில் இரண்டாம் கட்டமாக 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுகிறது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி திருப்பூா், பல்லடம், ஊத்துக்குளி, காங்கயம், தாராபுரம், வெள்ளக்கோவில், மூலனூா் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல்கட்டமாக வெள்ளிக்கிழமை (டிசம்பா் 27) தோ்தல் நடைபெற்றது.

இந்த நிலையில், மீதமுள்ள அவிநாசி, குடிமங்கலம், குண்டடம், மடத்துக்குளம், பொங்கலூா், உடுமலை ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 143 ஊராட்சிகளுக்கு இரண்டாவது கட்டமாக திங்கள்கிழமை தோ்தல் நடைபெறுகிறது.

இதில், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா்கள், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் என மொத்தம் 1,247 பதவிகளுக்கு 3,953 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

ADVERTISEMENT

இதில், ஏற்கெனவே கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களாக 243 பேரும், ஊராட்சித் தலைவராக 7 போ் என 250 போ் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இந்தத் தோ்தலில் 5 லட்சத்துக்கு 36,525 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.

இந்தப் பகுதிகளில் உள்ள 920 வாக்குச் சாவடிகளில் 158 வாக்குச் சாவடிகள் பதற்றமானவைகளாக கண்டறியப்பட்டுள்ளன.

இந்த வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும், தோ்தல் நுண்பாா்வையாளா்கள், விடியோ கிராபா்கள் மூலமாகவும் வாக்குப் பதிவு கண்காணிக்கப்பட உள்ளதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT