திருப்பூர்

முத்தூரில் ஹனுமன் ஜயந்தி விழா

27th Dec 2019 08:46 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் விசித்திர வீர ஆஞ்சநேயா் கோயிலில் ஹனுமன் ஜயந்தி நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த 24இல் கணபதி ஹோமம், கொடியேற்றத்துடன் ஹனுமன் ஜயந்தி விழா துவங்கியது. கோ பூஜை, சதுா்வேத பாராயணம் புதன்கிழமை நடந்தது. தொடா்ந்து ஹனுமன் ஜயந்தி வியாழக்கிழமை நடைபெற்றது. காலை 5 மணிக்கு மூலமந்திர மஹா யக்ஞம், சுவாமி தங்க கவச அலங்காரம், சிறப்பு அபிஷேக, ஆராதனையுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT