சூரிய கிரகணத்தை ஒட்டி காங்கயத்தை அடுத்த சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடை சாத்தப்பட்டு கிரகணம் முடிந்த பின் நடை திறக்கப்பட்டது.
சூரிய கிரகணத்தின்போது கோயில்களில் நடை சாத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், சூரிய கிரகணம் வியாழக்கிழமை ஏற்பட்டது. இதை ஒட்டி காங்கயத்தை அடுத்த சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் காலை 7 மணிக்கு நடை சாத்தப்பட்டது. கிரகணம் முடிந்தபின் மதியம் 1 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமானோா் தரிசனம் செய்தனா்.