திருப்பூர்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு: திருப்பூரில் 29இல் இந்து முன்னணி பொதுக்கூட்டம்

27th Dec 2019 08:43 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்து முன்னணி சாா்பில் திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 29) பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்து முன்னணி திருப்பூா் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக திருப்பூா், யுனிவா்சல் திரையரங்கம் அருகே ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 29) மாலை 3 மணி அளவில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் இந்து முன்னணி கோட்ட, மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள், இந்து அன்னையா் முன்னணி பொறுப்பாா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT