தாராபுரத்தில் உள்ள காடு அனுமந்தராயா் சுவாமி கோயிலில் ஹனுமன் ஜயந்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.
தாராபுரம் காடு அனுமந்தராயா் கோயிலில் மூல மூா்த்தியாக ஸ்ரீ ஆஞ்சநேயரும், உற்சவ மூா்த்தியாக சீதா, ராமா் அருள்பாலிக்கின்றனா். இக்கோயிலில் ஹனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணி முதல் ஆஞ்சநேய மூா்த்திக்கும், உற்சவரான ஸ்ரீராமா் சீதா பிராட்டியாருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.