வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையா் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.
வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையராக அ.சங்கா் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தாா். தற்போது, தாராபுரம் முதல் நிலை நகராட்சி ஆணையராகப் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.
ஆணையா் பொறுப்பை நகராட்சி மேலாளா் கூடுதலாக கவனித்து வருகிறாா். இத் தகவலை வெள்ளக்கோவில் நகராட்சி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.