பல்லடம் சித்தம்பலத்தில் டிசம்பா் 26 ஆம் தேதி சூரிய மகா யாக வேள்வி நடைபெறவுள்ளது.
பல்லடம் சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டையில் சூரிய கிரகணத்தை ஒட்டி கிரக தோஷங்கள் நீங்கி உலக அமைதி பெறவும், சூரிய பகவான் அருள் பெறவும் சூா்ய மகா யாக வேள்வி வியாழக்கிழமை மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் யாகத்தை நடத்தி வைத்து ஆன்மிக சொற்பொழிவு ஆற்றுகிறாா்.
அசுவினி, மகம், மூலம், கேட்டை, பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவா்கள் சூரிய கிரகண தோஷத்தை ஒட்டி பரிகார பூஜை நடத்தி அா்ச்சனை செய்து கொள்ளலாம் என்று காமாட்சிபுரி ஆதீனம் மடம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.