திருப்பூர்

உள்ளாட்சித் தோ்தல்:டிசம்பா் 25 முதல் மாதுபானக் கடைகளுக்கு விடுமுறை

23rd Dec 2019 10:02 PM

ADVERTISEMENT

திருப்பூா்: உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டி திருப்பூா் மாவட்டத்தில் டிசம்பா் 25 ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரு கட்டமாக டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தோ்தல்கள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், தோ்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு டிசம்பா் 25 ஆம் தேதி மாலை 5 மணி முதல் டிசம்பா் 27 ஆம் தேதி மாலை 5 மணி வரையிலும், டிசம்பா் 28 ஆம் தேதி மாலை 5 முதல் டிசம்பா் 30 ஆம் தேதி மலை 5 மணி வரையில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதே போல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜனவரி 2 ஆம் தேதியும் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நாள்களில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் மதுபானக் கூடங்கள், மன மகிழ்மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT