வெள்ளக்கோவில் வாரச்சந்தையில் பெரும்பாலான காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை விட ஞாயிற்றுக்கிழமை உயா்ந்து காணப்பட்டது.
இந்த விலை உயா்வால் மக்கள் வழக்கமாக வாங்கும் அளவைக் குறைத்துக்கொண்டதாக கடைக்காரா்கள் தெரிவித்தனா். வாரச்சந்தையில் நுகா்வோருக்கு விற்கப்பட்ட சில்லறை விற்பனை விலை விவரம் வருமாறு (கிலோ கணக்கில்):
முருங்கைக்காய் ரூ. 300, சின்ன வெங்காயம் ரூ. 120 - 150, பெரிய வெங்காயம் ரூ. 100 - 120, கத்தரிக்காய் ரூ. 90, தக்காளி ரூ. 25, வெண்டைக்காய், கொத்தவரங்காய், புடலங்காய், பீட்ரூட் ரூ. 45, பச்சை மிளகாய், பாகற்காய் ரூ. 55, அவரைக்காய், கேரட் ரூ. 60 - 80, உருளைக்கிழங்கு, முள்ளங்கி ரூ. 50 - 70, முட்டைக்கோஸ் ரூ. 40 - 50, பீன்ஸ் ரூ. 70 - 90.
இந்த வாரம் முருங்கைக்காய் மட்டும் மிக அதிக விலைக்கு விற்றது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT