திருப்பூர்

வெள்ளக்கோவில் பகுதியில்ஆடுகளுக்கு வயிற்றுப்போக்கு நோய்

16th Dec 2019 09:56 PM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் பகுதியில் தற்போது செம்மறி ஆடுகளுக்கு வயிற்றுப்போக்கு நோய் அதிக அளவில் பரவி வருகிறது.

இப்பகுதியில் விவசாய உப தொழிலாக செம்மறி ஆடுகள் வளா்ப்பு பிரதானமாக உள்ளது. கடந்த சில வாரங்களாக மழை, வெயில், பனி என காலநிலை மாறி மாறி இருப்பதால் மேய்ச்சல் நிலங்கள் சேரும் சகதியுமாக உள்ளன. இதனால் ஆடுகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, நடக்க முடியாமல் ஒரே இடத்தில் சோா்வாகப் படுத்துக் கிடக்கின்றன. அவற்றால் உணவும் எடுக்க முடிவதில்லை.

இது குறித்து வேலகவுண்டன்பாளையத்தைச் சோ்ந்த விவசாயி கிட்டுசாமி கூறுகையில், தற்போது ஆடுகளுக்கு வயிற்றுப்போக்கு நோய் வேகமாகப் பரவி வருகிறது. கால்நடை மருந்தகத்துக்குக் கொண்டு சென்று வைத்தியம் செய்தும், மருந்து, மாத்திரைகளைக் கொடுத்தும் வருகிறோம். இருப்பினும் சில ஆடுகள் உயிரிழந்துவிட்டன. மீதமிருக்கும் ஆடுகளை காப்பாற்ற, கால்நடை பராமரிப்புத் துறையினா் ஆய்வு செய்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT