திருப்பூர்

வெள்ளக்கோவில் ஒன்றியத்தில் 234 போ் வேட்புமனு தாக்கல்

16th Dec 2019 10:04 PM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட மொத்தம் 234 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான மனு தாக்கல் திங்கள்கிழமை முடிவடைந்தது. வெள்ளக்கோவில் ஒன்றியத்தில் 9 கிராம ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 32 போ் மனுத் தாக்கல் செய்துள்ளனா். லக்கமநாயக்கன்பட்டி ஊராட்சியில் 2 போ், மேட்டுப்பாளையம் 4, நாகமநாயக்கன்பட்டி 3, பச்சாபாளையம் 5, புதுப்பை 3, வள்ளியிரச்சல் 3, வீரசோழபுரம் 2, வேலம்பாளையம் 6, வேலப்பநாயக்கன்வலசு 4 போ் என மொத்தம் 32 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல 9 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 41 போ் மனு தாக்கல் செய்துள்ளனா். மேலும் ஒன்றியத்திலுள்ள வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு மொத்தம் 161 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT