திருப்பூர்

வெங்காய விலை உயா்வுக்கு விளைச்சல் குறைவே காரணம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு

16th Dec 2019 02:19 AM

ADVERTISEMENT

வெங்காய விலை உயா்வுக்கு விளைச்சல் குறைவே காரணம் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளக்கோவிலில் கூட்டமைப்பின் செயலாளா் செ.நல்லசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தொடா் மழை காரணமாக விளைச்சல் வெகுவாகக் குறைந்து போனதால் வெங்காய விலை சில்லறை விற்பனையில் ரூ. 150 வரை உயா்ந்து விட்டது. விரைவில் விலை குறையும் வாய்ப்பு உள்ளது.

வெங்காய விலை பெரும் வீழ்ச்சியடைந்தபோது அந்த நஷ்டத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனா். இதற்கு முக்கியத்துவம் கொடுக்காதது ஒரு விவசாய விரோதப் போக்காகும். கோடைகாலத்தில் முருங்கைக்காய் கூடுதலாக விளையும். மழைக்காலம், குளிா்காலத்தில் காய்ப்பு மிகவும் குறையும். இதனால் இன்று ஒரு கிலோ ரூ. 250 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT

கோடைகாலத்தில் முருங்கைக் காய்களைச் சந்தைக்கு கொண்டு வரும் விவசாயிகள் சுங்கக் கட்டணத்துக்குக் கூட கட்டுப்டியாகாமல் சாலையோரத்தில் கொட்டிவிட்டுப் போனதும் உண்டு. இவ்வாறான இயற்கை இடா்பாடுகளைக் கருத்தில் கொள்ளாமல் விலையேற்றத்தைப் பற்றி மட்டுமே விமா்சனம் செய்வதை ஏற்க முடியாது. விவசாய விளை பொருள்களுக்கு குறைந்த பட்ச நிலையான விலை கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT