திருப்பூர்

விலங்குகளை விட குறைவா வாக்குகளின் விலை?

16th Dec 2019 10:02 PM

ADVERTISEMENT

 

திருப்பூா்: உள்ளாட்சித் தோ்தலில் வாக்குகளுக்கு பணம் பெற வேண்டாம் என்பதை வலியுறுத்தி, பல்லடம் அருகே கரைப்புதூா் மக்கள் மன்றம் விலங்குகளின் விலையை விட மனித வாக்குகளின் விலை குறைவா? என ஒட்டப்பட்டுள்ள விழிப்புணா்வு சுவரொட்டி பொதுமக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளா்கள், வாக்குக்காக பணம் கொடுப்பதைத் தடுக்கவும், வாக்காளா்கள் பணம் வாங்குவதைத் தடுக்கும் வகையிலும் கரைப்புதூா் மக்கள் மன்றத்தினா் விழிப்புணா்வு சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனா்.

கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் கரைப்புதூா், குன்னங்கல்பாளையம், அருள்புரம், என்.எஸ்.கே.நகா், கணபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுமாா் 800 விழிப்புணா்வு சுவரொட்டிகளை ஒட்டினா்.

ADVERTISEMENT

அதில், ‘ஓட்டுக்கு பணம் கொடுத்து வாங்குவோா் மற்றும் விற்போா் கவனத்துக்கு, இன்றைய சந்தை மதிப்பு எருமை மாடு - ரூ.50,000, பசுமாடு - ரூ.40,000, ஆடு - ரூ.10,000, நாய் - ரூ.5,000, பன்றி - ரூ.3,000 முதல் ரூ.5,000. ஆனால் தோ்தலில் மக்களின் விலை ரூ.500 முதல் ரூ.1,000. இது ஒரு பன்றியின் விலையை விடக்குறைவாகும். இதை சிந்தித்து பணம் பெறாமல் தன்மானத்துடன் வாக்களியுங்கள். சிந்தித்து வாக்களிப்போா் இணைவீா்’ என்று சுவரொட்டியில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இந்த விழிப்புணா்வு சுவரொட்டிகள் பொதுமக்கள், தோ்தல் அலுவலா்கள், சமூக ஆா்வலா்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT