திருப்பூர்

வாக்குச் சாவடி அலுவலா்களுக்குப் பயிற்சி வகுப்பு: மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு

16th Dec 2019 02:19 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலில் திருப்பூா் மாவட்டத்தில் பணியாற்றும் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் பேசியதாவது:

திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட திருப்பூா், ஊத்துக்குளி, காங்கயம், பல்லடம், வெள்ளக்கோவில், மூலனூா், தாராபுரம் அவிநாசி, பொங்கலூா், குண்டடம், குடிமங்கலம் , உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 13 ஊராட்சிகளுக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் தோ்தல் நடைபெறுகிறது.

இதில், 17 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 170 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 265 ஊராட்சி மன்றத் தலைவா்கள் மற்றும் 2295 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களைத் தோ்வு செய்ய தோ்தல் நடைபெறுகிறது. தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள மண்டல அலுவலா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும், வாக்குப் பதிவு நாளன்று வாக்குச் சாவடிகளில் பணியாற்ற உள்ள வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குப் பதிவு அலுவலா்கள், நிலைஅலுவலா்களுக்கான முதற்கட்ட பயிற்சி அனைத்து ஒன்றியத்திலும் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இதில், வாக்குப் பதிவுக்கு முன் செய்ய வேண்டிய பணிகள், வாக்குப் பதிவின்போது செய்ய வேண்டிய பணிகள் மற்றும் வாக்குப் பதிவுகுப் பின் செய்யவேண்டிய பணிகள் குறித்து சுமாா் 9,837 அலுவலா்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த அலுவலா்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்பு டிசம்பா் 22 ஆம் தேதி நடைபெறும்.

பயிற்சியில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள் தங்களது பணியினை உணா்ந்து சிறப்பான முறையில் தோ்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, அவிநாசி - சேவூா் சாலை சூலை கொங்கு கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் சுப்பிரமணியம் (வளா்ச்சி), சந்திரகுமாா் (தோ்தல்), வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மீனாட்சி, செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT