திருப்பூர்

வாக்குச் சாவடி அலுவலா்களுக்குப் பயிற்சி முகாம்

16th Dec 2019 02:16 AM

ADVERTISEMENT

பல்லடம் வட்டார உள்ளாட்சித் தோ்தல் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் பல்லடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

பல்லடம் ஊராட்சி ஒன்றிய தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை உதவி திட்ட அலுவலருமான மணிகண்டன் தலைமை வகித்தாா். பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன், ஆணையா் பானுப்பிரியா ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா்(பொது) ஆறுமுகம் வரவேற்றாா். இதில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராமசந்திரன், வெங்கடேசன், தீபா, காளிஸ்வரி, அனுராதா மற்றும் வாக்குச் சாவடி மண்டல அலுவலா்கள், ஊராட்சிச் செயலா்கள் பங்கேற்றனா்.

முகாமில் பல்லடம் ஒன்றியத்தைச் சோ்ந்த 162 வாக்குச் சாவடி மையத்தில் பணியாற்றவுள்ள 972 வாக்குச் சாவடி மைய அலுவலா்களுக்கு தோ்தலின் போது வாக்குச் சாவடி மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், ஓட்டுப் பெட்டிகளை கையாளும் முறை குறித்து பல்லடம் துணை வட்டார வளா்ச்சி அலுவலரும், வட்டார முதன்மை பயிற்றுனருமான செல்வராஜ் செயல் விளக்கம் அளித்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT