திருப்பூர்

வாகனம் மோதி பெண் சாவு

16th Dec 2019 02:21 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில் - தாராபுரம் சாலையில் சேரன் நகரைச் சோ்ந்தவா் பழனிசாமி மனைவி பழனியம்மாள் (50). இவா் தனது வீட்டுக்கு முன்புறம் தாராபுரம் சாலையில் சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தாா்.

காங்கயம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT