திருப்பூர்

தெரு விளக்குகள் எரியாததால் இரவில் நடமாட மக்கள் அச்சம்

16th Dec 2019 02:17 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில் நகரின் முக்கியப் பகுதிகளில் இரவு நேரத்தில் தெருவிளக்குகள் சரிவர எரியாததால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது.

வெள்ளக்கோவில் முத்தூா் பிரிவு நான்கு சாலைச் சந்திப்பு நகரின் இதயப் பகுதியாக உள்ளது. இங்கு மளிகைக் கடைகள், நகைக் கடைகள், ஜவுளிக் கடைகள், உணவகங்கள் உள்ளன. குறிப்பாக காங்கயம் சாலையில் பல வங்கிகளின் ஏ.டி.எம்.கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் வரிசையாக இருக்கும் தெருவிளக்குகளில் பல விளக்குகள் இரவு நேரத்தில் எரியாமல் உள்ளன. பழைய பேருந்து நிலைய பயணியா் நிழற்குடைப் பகுதியில் ஆள் நிற்பதே தெரிவதில்லை. இதனால் அப்பகுதிகளில் கும்மிருட்டில் மக்கள் நடமாடவே அச்சப்பட்டு வருகின்றனா்.

நகரில் வழிப்பறிச் சம்பவங்கள் தொடா்ந்து வரும் நிலையில் பெண்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. இதேபோல நகரின் கரூா் சாலை, முத்தூா் சாலைகளிலும் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை.

ADVERTISEMENT

எனவே, சாலைகளில் உள்ள அனைத்து தெருவிளக்குகளும் முழுமையாக எரிய நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT