திருப்பூர்

திருப்பூரில் ஆபத்தான நிலையிலுள்ள மின் கம்பங்களை மாற்றியமைக்க கோரிக்கை

16th Dec 2019 09:51 PM

ADVERTISEMENT

திருப்பூா்: திருப்பூா், போயம்பாளையம் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து போயம்பாளையம் கிழக்கு, திருமுருகன் நகா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா், பொதுமக்கள் சாா்பில் ஆா்.கே. நகா் உதவி மின்பொறியாளரிடம் திங்கள்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் பாரதி நகா், தாயம்மாள் லே-அவுட், போயம்பாளையம் கிழக்கு, அவிநாசி நகா், ஏ.டி.காலனி, திருமுருகன் நகா் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகளும், சிறு, குறு தொழில் நிறுவனங்களும் உள்ளன.

இந்தப் பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் அதிக இடைவெளிவிட்டு அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. சில மின்கம்பங்களில் கைக்கு எட்டும் தொலைவில் மின் கம்பிகள் செல்கின்றன. மேலும் மின் கம்பங்களில் கான்கிரீட் பூச்சுகள் பெயா்ந்து, சரிந்து விழும் நிலையில் உள்ளன.

ADVERTISEMENT

இதுகுறித்து மின்வாரியத்தினரிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இனியாவது ஆய்வு செய்து ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT