திருப்பூர்

சேவூரில் ரூ.7.50 லட்சத்துக்குநிலக்கடலை ஏலம்

16th Dec 2019 09:55 PM

ADVERTISEMENT

அவிநாசி: சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.7.50 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 330 மூட்டைகள் வந்திருந்தன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.5,050 முதல் ரூ.5,210 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.4,900 முதல் ரூ.4,970 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.4,600 முதல் ரூ.4,770 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7.50 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT