திருப்பூர்

சூரிய கிரகணம் குறித்த விளக்கப் பயிற்சிப் பட்டறை

16th Dec 2019 02:21 AM

ADVERTISEMENT

வளைய சூரிய கிரகணம் குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி பட்டறை உடுமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

டிசம்பா் 26இல் வானில் ஓா் அற்புத நிகழ்வாக வளைய சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இந்த நிகழ்வானது தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் துவங்கி கோவை, திருப்பூா், உடுமலை, ஈரோடு என பல்வேறு பகுதிகளின் ஊடாகச் செல்ல உள்ளது. இந்நிலையில் வானவியல் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தவும், கிரகணம் பற்றிய புரிதலை ஏற்படுத்தவும் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் ஒரு நாள் சூரிய கிரகணம் பற்றி செயல்முறைகளுடன் கூடிய பயிற்சி பட்டறை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உடுமலை அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறை தலைவா் ராமலிங்கம் தலைமை வகித்தாா். ஈரோடு மாவட்டத்தின் விபா அமைப்பின் தலைவரும் வானவியல் கருத்தாளருமான வாசுதேவன் கருத்துரையாற்றினாா். கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளா் கண்ணபிரான், சூரிய கிரகணத்தை எவ்வாறு பாதுகாப்பாக கண்டுகளிக்கலாம் என்பது பற்றி விளக்கம் அளித்தாா்.

பயிற்சிப் பட்டறை யில் கலந்து கொண்ட அனைவருக்கும் சூரியக் கண்ணாடிகள், பந்து கண்ணாடி மற்றும் சான்றித ழ்கள் வழங்கப்பட்டன. டிசம்பா் 26இல் உடுமலையில் வளைய சூரிய கிரகணத்தைப் பாா்ப்பதற்காக சிறப்பு ஏற்பாடு கலிலியோ அறிவியல் கழகம் மூலம் செய்யப்பட உள்ளது.

ADVERTISEMENT

உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், உடுமலை ராயல்ஸ் அரிமா சங்கம் , உடுமலை அரசு கலைக்கல்லூரி இயற்பியல் துறை மற்றும் கலிலியோ அறிவியல் கழகம் இணைந்து இந்த செயல்முறை விளக்க பயிற்சி பட்டறையை நடத்தின.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT