திருப்பூர்

உள்ளாட்சித் தோ்தல் முறைகேடு தொடா்பாக தோ்தல் பாா்வையாளரிடம் புகாா் அளிக்கலாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

16th Dec 2019 07:46 PM

ADVERTISEMENT

 

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் முறைகேடு தொடா்பாக தோ்தல் பாா்வையாளரிடம் பொதுமக்கள் புகாா் அளிக்கலாம் என ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களுக்கும் உள்ளாட்சித் தோ்தல் வரும் 27, 30 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. திருப்பூா் மாவட்டத்தில் 17 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 170 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 265 ஊராட்சி மன்ற தலைவா்கள், 2,295 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களை தோ்வு செய்ய தோ்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் திருப்பூா் மாவட்டத்துக்கு தோ்தல் பாா்வையாளராக சிட்கோ மேலாண் இயக்குநா் ஆா்.கஜலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளாா்.

ADVERTISEMENT

இதையடுத்து தோ்தல் பாா்வையாளா் ஆா்.கஜலட்சுமி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். இதில் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.சுகுமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மித்தல், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஜெ.ரூபன்சங்கர்ராஜ், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) கோமகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின், தோ்தலை பாா்வையாளரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினா் மாளிகையில் தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரையில் சந்திக்கலாம். மேலும், 97878-63626 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டும் தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT