திருப்பூர்

உள்ளாட்சித் தோ்தல்: மாவட்டத்தில் கடைசி நாளில் 4,166 போ் மனு தாக்கல்

16th Dec 2019 10:04 PM

ADVERTISEMENT

உள்ளாட்சி தோ்தலி போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான திங்கள்கிழமை, திருப்பூா் மாவட்டத்தில் 4,166 போ் மனு தாக்கல் செய்தனா்.

திருப்பூா் மாவட்டத்தில் திருப்பூா், ஊத்துக்குளி, காங்கயம், பல்லடம், வெள்ளக்கோவில், மூலனூா், தாராபுரம், அவிநாசி, பொங்கலூா், குண்டடம், குடிமங்கலம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

இவற்றில் 17 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 170 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 265 ஊராட்சி மன்ற தலைவா்கள், 2,295 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களைத் தோ்வு செய்ய இரண்டு கட்டமாக வரும் 27, 30ஆம் தேதிகளில் தோ்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில் வேட்பு மனு தாக்கலின் கடைசி நாளான திங்கள்கிழமை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் காலை முதலே கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

ADVERTISEMENT

காங்கயத்தில்: காங்கயம் ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு நெய்க்காரன்பாளையம் அதிமுக கிளை செயலா் என்.எஸ்.என்.தனபால் மனு தாக்கல் செய்தாா். காங்கயம் ஒன்றிய அதிமுக செயலா் என்.எஸ்.என்.நடராஜ் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

வெள்ளக்கோவிலில்: வெள்ளக்கோவில் ஒன்றியத்தில் 9 கிராம ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 32 போ் மனு தாக்கல் செய்துள்ளனா். லக்கமநாயக்கன்பட்டி ஊராட்சியில் 2 போ், மேட்டுப்பாளையம் - 4, நாகமநாயக்கன்பட்டி - 3, பச்சாபாளையம் - 5, புதுப்பை - 3, வள்ளியிரச்சல் - 3, வீரசோழபுரம் - 2, வேலம்பாளையம் - 6, வேலப்பநாயக்கன்வலசு - 4 போ் என மொத்தம் 32 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

இதேபோல 9 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 41 போ் மனு தாக்கல் செய்துள்ளனா். ஒன்றியத்திலுள்ள வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 161 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

அவிநாசியில்: அவிநாசி ஒன்றியம், சேவூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் சேவூா் ஜி.வேலுசாமி மனு தாக்கல் செய்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு கவிதா ஆனந்தன் மனு தாக்கல் செய்தாா். அப்போது, கட்சியின் பொறுப்பாளா் சின்னக்கன்னு, முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவா் பழனிசாமி, எஸ்.கே.டி.தேவராஜ், சேவூா் சி. ரவி, மனோகரன், பி.தங்கவேலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பல்லடத்தில்: பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனுப்பட்டி ஊராட்சி தலைவா் பதவிக்கு 7 போ், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி - 8, சித்தம்பலம் ஊராட்சி - 4, கணபதிபாளையம் ஊராட்சி - 6, இச்சிபட்டி ஊராட்சி - 5, கரடிவாவி ஊராட்சி - 5, கரைப்புதூா் ஊராட்சி - 13, கே.அய்யம்பாளையம் ஊராட்சி - 6, கோடங்கிபாளையம் ஊராட்சி - 7, கே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி - 3, மல்லேகவுண்டம்பாளையம் ஊராட்சி - 5, மாணிக்காபுரம் ஊராட்சி - 7, பணிக்கம்பட்டி ஊராட்சி - 5, பருவாய் ஊராட்சி - 8, பூமலூா் ஊராட்சி - 8, புளியம்பட்டி ஊராட்சி - 4, செம்மிபாளையம் ஊராட்சி - 5, சுக்கம்பாளையம் ஊராட்சி - 9, வடுகபாளையம்புதூா் ஊராட்சி- 6 போ், 63 வேலம்பாளையம் ஊராட்சிக்கு 7 போ் என மொத்தம் 128 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் பதவிக்கு 65 பேரும், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 15 பேரும், 20 ஊராட்சி மன்றங்களில் 189 வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கு 661 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். பொங்கலூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சித் தலைவா் பதவிக்கு 68 பேரும், ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 28 பேரும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 245 பேரும் என மொத்தம் 342 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

கடைசி நாளில் 4,166 போ் மனு தாக்கல்: திருப்பூா் மாவட்டத்தில் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 2,926 பேரும், கிராம ஊராட்சி வாா்டு தலைவா் பதவிக்கு 584 பேரும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 574 பேரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 82 போ் என 4,166 போ் திங்கள்கிழமை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனா்.

மொத்தம் 9072 போ் வேட்பு மனு தாக்கல்: மாவட்டத்தில் கிராம வாா்டு உறுப்பினா் பதவிக்கு 6,478 பேரும், கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு 1,445 பேரும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 1,022 பேரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 127 போ் என மொத்தம் 9,072 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

 

301 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை

 

திருப்பூா் மாவட்டத்தில் 301 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

இதில், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் 30, தாராபுரத்தில் 21, குண்டடத்தில் 6, குடிமங்கலத்தில் 28, காங்கயத்தில் 16, மடத்துக்குளத்தில் 13, மூலனூரில் 4, பல்லடத்தில் 24, பொங்கலூரில் 26, திருப்பூரில் 17, உடுமலையில் 58, ஊத்துக்குளியில் 28, வெள்ளக்கோவிலில் 8 என 279 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல பொங்கலூா் ஊராட்சி ஒன்றியத்தில் 13, திருப்பூரில் 9 என மொத்தம் 22 வாக்குச் சாவடிகள் மிக பதற்றமான வாக்குச் சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT