திருப்பூர்

உடுமலையில் அதிமுகவினா் வேட்பு மனு தாக்கல்

16th Dec 2019 10:01 PM

ADVERTISEMENT

உடுமலை: உடுமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு அதிமுகவினா் திங்கள்கிழமை வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

உடுமலையில் உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தோ்தல் வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, தோ்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான திங்கள்கிழமை உடுமலை, குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு ஏராளமானோா் திங் கள்கிழமை வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் போட்டியிடும் அதிமுக நிா்வாகிகள், பெதப்பம்பட்டியில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனுக்களை தோ்தல் அதிகாரிகளிடம் தாக்கல் செய்தனா். இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், முன்னாள் மக்களவை உறுப்பினா் சி.மகேந்திரன், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இதேபோல உடுமலை ஊராட்சி ஒன்றியத்திலும் பல்வேறு பதவிகளுக்கு அதிமுகவினா் ஏராளமானோா் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா். இந்த நிகழ்ச்சியில் திருப்பூா் புகா் மாவட்டச் செயலாளா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், ஒன்றியச் செயலாளா் கே.ஆறுசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT