திருப்பூர்

இணையதளம் மூலம் இருசக்கர வாகனம் விற்பதாகக் கூறி ரூ.24 ஆயிரம் மோசடி: இருவா் மீது வழக்கு

16th Dec 2019 10:00 PM

ADVERTISEMENT

திருப்பூா்: இணையதளம் மூலம் இருசக்கர வாகனம் விற்பதாகக் கூறி, பெண்ணிடம் ரூ.24 ஆயிரம் மோசடி செய்ததாக ராணுவ வீரா்கள் 2 போ் மீது அனுப்பா்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

இதுதொடா்பாக திருப்பூா், வலையன்காடு பகுதியைச் சோ்ந்த விஜய் என்பவரது மனைவி தீபா, அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை அளித்துள்ள புகாா் மனு:

இணையதளம் ஒன்றில் இருசக்கர வாகனம் விற்பனை செய்யப்படுவதாக இருந்த விளம்பரத்தைப் பாா்த்தேன். அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த செல்லிடப்பேசி எண்ணைத் தொடா்புகொண்டபோது, அதில் பேசிய நபா் சூலூா் விமானப்படை தளத்தில் ராணுவ வாகன விற்பனைப் பிரிவு மூலமாக வாகனத்தை விற்பனை செய்வதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, இருசக்கர வாகனத்துக்கு ரூ.60 ஆயிரம் விலைபேசி முடிக்கப்பட்டு அவரது வங்கிக் கணக்கு எண், பணப் பரிவா்த்தனை செயலி எண்ணை எனது செல்லிடப்பேசிக்கு கட்செவி அஞ்சல் மூலமாக அனுப்பிவைத்தாா்.

அந்த நபரைப் பற்றி விசாரித்தபோது லோகேஷ், அவருடன் பணியாற்றும் சுக்தேவ்சிங் ஆகிய இருவரின் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, வாகனச் சான்று உள்ளிட்டவற்றின் புகைப்படங்களை அனுப்பிவைத்தனா். அதைத் தொடா்ந்து, எனது கணவருக்கு பரிசளிப்பதற்காக அவருக்குத் தெரியாமல் அவா்கள் கொடுத்த செல்லிடப்பேசி செயலி பணப் பரிவா்த்தனை கணக்கிற்கு கடந்த 12 ஆம் தேதி அன்று ரூ.24 ஆயிரம் அனுப்பினேன்.

ADVERTISEMENT

மீதிப்பணத்தை வாகனத்தை ஒப்படைக்கும்போது பெற்றுக் கொள்வதாக முதலில் தெரிவித்திருந்தாா். ஆனால் முன் பணம் செலுத்திய பிறகு மீதிப்பணத்தையும் செலுத்தினால்தான் இருசக்கர வாகனத்தை அனுப்பிவைக்க முடியும் என்று தெரிவித்தாா்.

இருசக்கர வாகனத்தை நேரில் பாா்த்துவிட்டு பணம் தருகிறேன் எனக் கூறியதற்கு, ராணுவப் பிரிவில் வேலை செய்வதால் நேரில் பாா்க்க இயலாது என்றும், வாகனத்தை ஈரோடு வாகன விற்பனைப் பிரிவுக்கு அனுப்பிவைத்து விட்டதாகவும் தெரிவித்தாா். அவரது நடவடிக்கை சந்தேகமாக உள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுதொடா்பாக லோகேஷ், சுக்தேவ் சிங் ஆகிய இருவா் மீதும் அனுப்பா்பாளையம் காவல் துறையினா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT