திருப்பூர்

120 கிலோ இட்லி மாவு பறிமுதல்

14th Dec 2019 07:25 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் தயாரிப்புத் தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 120 கிலோ இட்லி மாவுகளை உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருப்பூா், பெருமாநல்லூா், குன்னத்தூா், வெள்ளக்கோவில் பகுதிகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். இதில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதேபோல தயாரிப்புத் தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 120 கிலோ இட்லி, மாவு பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இட்லி மாவு தயாரிக்கும்போது தராமன அரிசி, உளுந்து, வெந்தயத்தை பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT