திருப்பூர்

வெள்ளக்கோவில், மூலனூரில் வாக்கு எண்ணிக்கை மையங்கள்

14th Dec 2019 07:27 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில், மூலனூரில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்படுகின்றன.

மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் வரும் 27, 30 ஆகிய இரு தேதிகளில் நடைபெறவுள்ளது. வெள்ளக்கோவில், மூலனூா் ஊரக பகுதிகளில் 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தோ்தலை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்க உயா் அதிகாரிகளுக்கு கருத்துருக்கள் அனுப்பப்பட்டன. அதன்படி வெள்ளக்கோவில் - கரூா் சாலை, அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, மூலனூா் அரசு மேல்நிலைப் பள்ளி, காங்கயம் பகுதிக்கு நத்தக்காடையூா் பில்டா்ஸ் பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்படும் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT